மட்டக்களப்பில் முகத்துவாரம் வெட்டப்பட்டது ! மீனவர்கள் எதிர்ப்பிணை தெரிவித்தவண்னம் இருந்தனர்

மட்டக்களப்பில் கடந்தவாரம் ஏற்ப்பட்டுள்ள கனமழைகாரனமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் விவசாயிகளின் விழைநிலங்கள் பாதிக்கப்பட்டு அழிவடையும் அபாயத்தினை குறைக்கும் நடவடிக்கையாக இன்று மாவட்ட அரசாங் அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் அனுமதியுடன் பிரதேச செயலாளர் வீ.வாசுதேவனின் நேரடிகண்காணிப்பில் அனர்த்த முகாமைத்துவ நிலை உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியலாளர் எஸ்.சசிநந்தன் மற்றும் மீன் பிடித்திணைகள பிரதிநிகள் மீனவர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொன்டு வெள்ள நீரை வெட்டிகடலுக்குள் அனுப்பப்பட்டது.

மீனவர்கள் முகத்துவாரம் ஆற்றுவாயிணை வெட்டுவதற்கு கடும் எதிர்ப்பிணை தெரிவித்தவண்னம் இருந்தனர் ஆதிகாரிகளினால் மக்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக விழக்கமளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுவருவதாகவும் தங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கு எவ்வாறான நிவாறன உதவிகளும் செய்யப்படுவதில்லை என மீனவர் ஒருவர் குறிப்பிட்டார்.

அதுபோன்று விவசாயி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தங்களுக்கு எற்படுகின்ற பாதிப்புக்களுக்கு எவராலும் நட்டஈடுகள் வழங்கப்படுவதில்லை என்றும் கடந்த ஆண்டு ஏற்ப்பட்டுள்ள அழிவுகளுக்கு இதுவரை எவ்வாறான நிவாரணமும் கிடைக்காத நிலையில் கடன்பட்டுத்தான்  இத்தொழிலை செய்துள்ளோம் இயற்கையும் இவ்வாறு பாதிப்பினை ஏற்ப்படுத்தினால் நாம் என்னசெய்வது. என தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்த நிலையில் சமாதானமான முறையில் முகத்துவாரம் ஆற்றுவாயிணை வெட்டி கடலுக்குள் வெள்ள நீர் அனுப்பப்பட்டது.