சீரற்ற காலநிலை – நாடு முழுவதும் 2,200 பேர் பாதிப்புசீரற்ற காலநிலையால் 700 குடும்பங்களைச் சேர்ந்த 2,200 ற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சுமார் 300 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையால் 2 வீடுகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 46 வீடுகள் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்தம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்வதற்கும், தகவல்களை தெரிவிப்பதற்கும் 117 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.