மட்டு.கல்முனை வீதி விபத்தில் மூவர் படுகாயம்மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் கல்லடி பிரதேசத்தில் இடம் பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளொன்று அதே திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒருவர் கால் உடைந்த நிலையிலும் ஏனைய இருவரும் காயமடைந்த நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.