மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி அபகரிப்பு

(கிருசாயிதன் )
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால்  வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரின்  தாலி  அறுக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று மாலை ஐந்து மணியளவில் தம்பிலுவில் வீ.சி வீதியில்  இடம்பெற்றுள்ளது .   

மேற்படி சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

குடும்ப பெண் ஒருவர் தம்பிலுவில்  பிரதான வீதியிலிருந்து வீ.சி வீதியினூடாக தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற   கொள்ளையர்கள்  தாலியை  அறுத்துச் சென்றுள்ளனர்.

இதே போன்றதொரு சம்பவம் அண்மையில் திருக்கோவிலிலும்  இடம்பெற்றது . 
அண்மைய காலங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது .  மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் . 

 இது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .