திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை ஆரம்பம் !

(எஸ்.கார்த்திகேசு)
அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் நிருவாகத்தினரால் அறநெறிப் பாடசாலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(16) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இவ் அறநெறிப் பாடசாலை இந்து கலாசார திணைக்களத்தின் ஊடாக அலய முன்றலில் அமைந்துள்ள திருமூலர் மண்டபத்தில் ஆலய நிருபாகத்தினரின் சமூக மேம்பாட்டு வேலைத் திட்டத்தின் கிழ் இவ் அறநெறிப் பாடசாலை திறந்து வைக்கப்படவுள்ளன.

இவ் அறநெறிப் பாடசாலையானது கடந்த சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை தொடர்ந்த அங்கு நடத்த முடியாத சூழ்நிலை காணப்பட்டதுடன் சுமார் 16 வருடங்களின் பின்னர் மீண்டும் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி அறநெறிப்பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இவ் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக இந்தியா ரீசிசேகம் சுவாமி நித்தியானத்தா சரஸ்வதி மகாராஜு அவர்கள் கலந்து கொள்ள இருப்பதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.ஜெயராஜ் பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி சர்மிளா பிரசாந் ஆலய நிருவாகிகள் மற்றும் சமய பொது நிறுவனங்களின் நிருவாகிகள் என பலரும் கலந்த கொண்டு அறநெறிப் பாடசாலையை திறந்து வைக்வுள்ளனர்.