மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்த்தர்கள் அவுஸ்திரேலியாவுக்கு கள விஜயம் !

வான்மை விருத்தியினை மேற்கொள்ளும் நோக்கில் அவுஸ்திரேலியன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற திறன் மிகுந்த சமூகத்தினைகட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தின் கீழ் இந் நிறுவனம் சுற்றுலாத் துறையினரை மேம்படுத்தி வலுமை மிகுந்த சுற்றுலாப் பயணத் துறையாகமாற்றியமைப்பதற்கு பல வழிகளிலும் இவ்வமைப்பு செயற்பட்டு வருகின்றது.
இந் நிறுவனத்தினால் அரசாங்கசேவையில் மக்கள் பணிகளை செயற்படுத்திவருகின்ற உத்தியோகஸ்த்தர்கள் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலிய நாட்டுக்கான கள விஜயத்தினை இவ் அவுஸ்திரேலிய நிறுவனமானது இருபது உத்தியோகஸ்த்தர்களுக்கு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வகையிலே மட்டக்களப்பு மாவட்ட செயலக அபிவிருத்தி மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் மற்றும் திட்டமிடல் பிரிவினைச் சேர்ந்த உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார் ஆகியோர் இரு வாரங்களுக்கானஅலுஸ்திரேலிய கள விஜயத்தினை கடந்த ஏழாம் திகதி மேற்கொண்டிருந்தனர்.