போக்குவரத்தை இலகுபடுத்த பன்சல் வீதி ஒருவழிப்பாதையாக மாற்றும் தீர்மானம் நிறைவேற்றம்

மனித வாழ்வியிலின் மேம்பாட்டிற்காக அரசு வீதிளை அகலமானதாக அமைத்து வருகின்றது அதற்கமைவாக எமது மட்டக்களப்பு மாநகரசபையும் மக்களின் வசதி கருதி வளங்களைப் பயன்படுத்தி மாநகரசபையின் 20 வட்டாரங்குளிலும் பல்வேறு வீதிகளை அமைத்து வருகின்றது. மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள பன்சல வீதியில்; போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்துக்களை கட்டப்படுத்தும் நோக்கில் ஒருவளிப்பாதையாக மாற்றும் தீர்மானம் மாநகரசபை அமர்வில் நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் 30 ஆவது அமர்வு அண்மையில் (13) முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றபோது மாநகரசபையின் உறுப்பினரும் சுகாதார நிலையியற் குழுவின் தலைவருமான சிவம் பாக்கியநாதனால் முன்வைக்கப்பட்ட பன்சலை வீதியை ஒருவழிப் போக்குவரத்துக்காக மட்டுப்படுத்தும் பிரேரனை எல்லோhரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு பொலிஸ் - பன்சலை சந்தியில் போக்குவரத்து சமிக்ஞை பலகை பொருத்தப்பட்டு பொது மக்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பொலிசார் குறித்த வீதியின் நெரிசலை கண்டும் காணாததுபோல் செயல்படுகின்றனர். குறித்த வீதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளரின் வாகனங்கள நிறுத்தி வைப்பதனால் பாரிய நெரிசல் ஏற்படுகின்றது எனத்தெரிவித்தார்.

ரெலிகொம் சந்தியில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை பொருத்தும் போது அருணகிரி வீதியை அகலமாக்குவதற்கு குறித்த வீதியில் உள்ள மக்கள் முனமுவந்து தங்களது வதிவிடக்காணிகளை விட்டுக் கொடுத்தது போல் குறித்த வீதியில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் விட்டுக் கொடுக்கும் போது இதை இலகுவாகக் செயல்படுத்த முடியும். மாநகரசபையினால் அமைக்கப்பட்டள்ள வடிகான்தான் வீதிக்கு ஒதுக்கிடப்பட்ட எல்லை எனக் கருதுகின்றனர். அவ்வாறில்லாமல் மாநகரசபை வழங்கியுள்ள கட்டிட அனுமதிக்கேற்றவாறு எல்லை அமைக்கபடவேண்டும் எனத் தெரிவித்தார்.