உலமா கட்சியின் ஆலோசனைக் கூட்டம் !

(அஸ்ஹர் இப்றாஹிம்)
உலமா கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான மத்திய குழுவை அமைப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் அக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீட் தலைமையில் கல்முனையிலுள்ள கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் உலமா கட்சி ஆதரவாளர்கள் எவ்வாறு நடந்து கொள்வது சம்பந்தமாகவும் , கல்முனைப் பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமாகவும் இக்கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டதுடன் , கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஸவின் வெற்றிக்கு பங்களிகளிப்பு செய்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

எதிர்காலத்தில் இலங்கையிலுள்ள ஏனைய தொகுதிகளிலும் உலமா கட்சியின் மத்திய குழுக்களை அமைக்கும் பணி விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீட் மேலும் தெரிவித்தார்.