மேலும் 208 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து வெளியேற்றம் !

தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் 208 பேர் வரையில் இன்று (25) அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிசிச்சை பெற்றுவந்த சுமார் 313 பேர் வரையில் அவர்களது வீடுகளுக்கு நேற்று (24) அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேவேளை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படாத நபர்கள் தொடர்பில் இன்று (25) முதல் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பிரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பொலிஸாருடன் இணைந்து இவ்வாறானவர்களை கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பிரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்ர பாலசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வெதுப்பக உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.