தொடர்ந்து வரும் போகங்களில் சம்பா மற்றும் கீரி சம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அவற்றுக்கான குறைந்தபட்ச கொள்வனவு விலையை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, இதற்கு முன்னர் ஒரு கிலோகிராம் ரூ. 125 ஆக இருந்த சம்பா நெல்லின் விலை ரூ. 130 ஆகவும், ரூ. 132 ஆக இருந்த கீரி சம்பா நெல்லின் விலை ரூ. 140 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண நாட்டு நெல்லின் கொள்வனவு விலை மாற்றமின்றி ஒரு கிலோகிராம் ரூ. 120 ஆக பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




.jpg)








.jpg)