மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட அறிவித்தல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மருந்துகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் ஊரடங்கு நேரத்தில் தமக்கான மருந்துகள் முடிவடைந்ததும் அவ் மருந்துகளை அஞ்சல் திணைக்களத்தினூடாக கடந்த திங்கள் கிழமை (30.03.2020) முதல் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

இந்த சேவையினை கிளினிக் வரும் நோயாளார்கள் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்துவதற்கான கால தாமதத்தை குறைப்பதற்காக ஏற்கனவே பாவனையில் உள்ள 065-3133330 தொலைபேசி இலக்கத்திற்கு மேலதிகமாக 065-3133331 இலக்கத்துடனும் தொடர்பினை ஏற்படுத்தி தங்களுக்கான மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியுமென மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் DR. திருமதி.கலாரஞ்சனி கணேசலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இச்சேவையினை பெற வார நாட்களில் அதாவது திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை எமது வைத்தியசாலையின் மேற்குறிப்பிடப்பட்ட இரு தொலைபேசி இலக்கத்துடனும் அழைப்பினை மேற்கொள்ள முடியும்.