கோறளைப்பற்று- மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்



(எச்.எம்.எம்.பர்ஸான்)
மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் கோறளைப்பற்று மேற்கு கல்வி அபிவிருத்தி சபையினால் விசேட கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை(27)  ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வீ.ரீ.அஜ்மீர், ஜே.தாஜூன் நிஸா, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஜாபீர் கரீம், ஆசிரிய ஆலோசகர்களான எம்.பீ.டி.கான், எம்.பீ.எம்.சித்தீக், எம்.சலாம், எம்.இனாமுல்லாஹ் மற்றும் பிரதேசப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இதில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் மற்றும் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்ள வசதிவாய்ப்புகளை மேற்கொள்ளல் போன்ற பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

குறித்த கலந்துரையாடலின் போது தொடராக செயற்பட நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

அத்தோடு குறித்த திட்டத்தின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல நலன்விரும்பிகள், முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் ஆகியோர்களின் ஒத்துழைப்புக்களை கல்வி அபிவிருத்தி சபை எதிபார்க்கின்றது.