சனநெரிசலில் மூவர் பலியான விவகாரம்: சந்தேக நபர்களுக்கு மறியல்

(காமிலா பேகம்)
கொழும்பு மாளிகாவத்த, ஜும்மா மஸ்ஜித் வீதியில் சன நெரிசலில் சிக்கி மூவர் பலியான சம்பத்தை அடுத்து கைது செய்யப்பட்ட 06 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களை வரும் ஜூன் 4ம் திகதி வரை மறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களில் மூவர் பலியாகக் காரணமாக இருந்த பணம் வழங்கும் தானநிகழ்வை ஏற்பாடு செய்திருந்த வர்த்தகரும் உள்ளார்.