காயத்திரி சமூகசேவை ஒன்றியத்தினால் குழந்தைகளுக்கான பால்மா வழங்கிவைப்பு

உலகெங்கிலும் பரவி வருகின்ற நோய்த்தொற்றின் காரணமாக மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு பல அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அல்லலுறும் மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு பல அமைப்பினரும் பல உதவித்திட்டங்களை வழங்கிவருகின்றனர்.

அந்த வகையில் நாவிதன்வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட வீரச்சோலை கிராமத்தில் உள்ள 2 வயதிற்கு உட்பட்ட 26 குழந்தைகளுக்கான பால்மா இன்று வீரமுனை காயத்திரி சமூகசேவை ஒன்றியத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.