பெரியகல்லாற்றில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: மேலும் இரு வீடுகளில் திருட்டு!

(பெரியகல்லாறு நிருபர் லக்ஸ்மன்)
பெரியகல்லாற்றில் மேலும் ஒரு கொள்ளை சம்பவம் இன்று(30) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இன்று அதிகாலை வேளையில் பெரியகல்லாறு 3ஆம் குறிச்சியில் உள்ள குகதாசன் மற்றும் அவரது மாமா திலேகநாதன் என்பவர்களின் வீட்டில் இச்சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. இத்திருட்டு சம்பவத்தில் சைக்கிள் மாத்திரம் களவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு அவர்களது வீட்டு ஜன்னல் கழட்டப்பட்டு அலுமாரி சிதைக்கப்பட்டிருந்தது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இது போன்ற திருட்டு சம்பவம் பெரியகல்லாற்றில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை அறிந்த வீட்டார் உடனடியாக களுவாஞ்சிக்குடி பொலிஸிடம் அறிவித்தனர். களுவாஞ்சிகுடி பொலிஸார் இத்திருட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.