வெற்றிவாய்ப்பை விற்றோமா? கொதித்தெழுந்தார் மஹேல ஜயவர்தன!

(ஜே.எப்.காமிலா பேகம்)
2011ம் ஆண்டில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் வெற்றிவாய்ப்பை, பணத்திற்கு விற்றதாக இலங்கை அணி மீது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து, அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தான கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சாட்சிகள் இருந்தால் பகிரங்கப்படுத்தும் படியும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் சவால் விடுத்துள்ளார்.

பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடகங்களும், சர்க்கஸ் நிகழ்ச்சி மற்றும் பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக மஹேல கூறியுள்ளார்.