கட்டுநாயக்க விமான நிலையம் திறப்பு திகதி மீண்டும் ஒத்திவைப்பு!


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்கும் திகதி மீண்டும் மூன்றாவது தடவையாக பிற்போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி விமான நிலையத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

எனினும் தற்போதைய நிலைமையில் விமான நிலையத்தைத் திறக்கும் திகதியை மாற்றியமைக்கவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.