வேள்ல்ட் விஷன் நிறுவனத்தால் நாவிதன்வெளியில் சிறுவர் நேய மாதிரிப்பாடசாலைகள் புனரமைப்பு செய்யப்பட்டு கையளிப்பு

வேள்ல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் நாவிதன்வெளி பிராந்திய அபிவிருத்தி திட்டமானது சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையுடன் இணைந்து சிறுவர் நேய மாதிரிப்பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல் எனும் கருப்பொருளின் கீழ் நாவிதன்வெளிக் கோட்டத்திலுள்ள 05 ஆரம்பப் பாடசாலைகளை புனரமைப்புச்செய்து பாடசாலைச் சமூகங்களிடம் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

நேற்றைய தினம் நடைபெற்ற இந்நிகள்வில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் MSS.நஜீம். பிரதிக் கல்விப்பணிப்பாளர் SMM.அமீர் பிரதிக் கல்விப்பணிப்பாளரும் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான செல்வி V.நிதர்சினி ஆகியோர் கலந்து கொண்டு வகுப்பறைகளைப் பார்வையிட்டு பாடசாலை சமூக பாவனைக்கு கையளித்தனர்.

மேலும் வேள்ட்விஷன் நிறுவனம் சார்பில் நாவிதன்வெளி பிராந்திய முகாமையாளர் செ.செல்வபதி, திட்ட இணைப்பாளர்களான அ.தனுராஜ் மற்று பா.ஜோர்ஜ் மீ டொனால்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிப்பிட்ட நிகழ்வானது பாடசாலை அதிபர் அருட் சகோதரி M.சிறியபுஸ்பம் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.