நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

கெக்கிராவை இஹலகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.