சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு சென்ற பூனை பிடிக்கப்பட்டது


சட்டவிரோதமாக ஹெரோயின் போதைப் பொருளை வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்புவதற்காக பயன்படுத்திய பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய குறித்த பூனை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த பூனையின் கழுத்தில் 07 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் பொதி ஒன்று கட்டப்பட்டிருந்தது.

இதற்கு மேலதிகமாக இரண்டு சிம் அட்டைகளும் Memory card ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலுக்கு பாதாள உலகத் தலைவர் ஒருவர் பயன்படுத்திய பருந்து ஒன்றும் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளது.