சிறப்பாக நடைபெற்று முடிந்த கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் இரத்ததான முகாம்


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நிறுவனத்தின் சமூக சேவைப் பிரிவான தஃவா சமூக சேவை நலன்புரிச் சங்கம் (DSWA) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் சனிக்கிழமை (12) மீராவோடை தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் நடைபெற்றது.

நிறுவனத்தின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற இவ் இரத்ததான நிகழ்வில் கல்குடா பிரதேசத்திலுள்ள ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

இரத்ததான நிகழ்வில் ஜம்மியாவின் நிர்வாகத் தலைவர் ஏ.ஹபீப் காஸிமி, பிரதித் தலைவர் எஸ்.எச்.அரபாத் சஹ்வி மற்றும் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.அனீஸ், ஜம்மியாவின் நிர்வாகத்தினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.