மட்டக்களப்பு உளநல உதவி நிலையம் மற்றும் CBM நிறுவனத்தினரால் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள் கையளிப்பு


(வவுணதீவு நிருபர்)
மட்டக்களப்பு உளநல உதவி நிலையம் மற்றும் CBM நிறுவனத்தினரால் மட்டக்களபு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் மாற்றத் திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர நாற்காலி உள்ளிட்ட சில உபகரணங்கள் இன்று பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், CBM நிறுவனத்தின் பிரதிநிதிகளான வாணி, குணசீலன் மற்றும் உளநல உதவி நிலைய இயக்குனர் யேசு சபை துறவி போல் சற்குணநாயகம் , இணைப்பாளர் இ . சில்வஸ்டர், திட்ட உத்தியோகத்தர் மரியதாஸ் சூசைதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்