நாடளாவிய ஊரடங்கு தொடர்பில் அறிவித்தல்!

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழலில், நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பித்தல் குறித்து எந்த திட்டமும் இதுவரை இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதே வேளை, நாட்டின் 44 பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள், வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றி செயற்படுதல் அவசியம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தற்போது கம்பஹா மாவட்டத்திலுள்ள 33 பொலிஸ் பிரிவுகளிலும் கொழும்பு வடக்கு பிராந்தியத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் வெல்லம்பிட்டிய மற்றும் குளியாப்பிட்டியவில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.  அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளூடாக வாகனங்கள் பயணிக்க முடியும் என்ற போதிலும், வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.