மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்- இராணுவத் தளபதி

கொரோனா தொற்றுக்குள்ளாகாமல் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் நாட்கள் மிகவும் தீர்மானமிக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பிலும் நோய் அறிகுறிகள் இருப்பினும் உடனடியாக சுகாதார பிரிவிடம் அறிவித்து ஆலோசனை பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் மற்றும் நெருங்கி செயற்பட்டவர்களுக்கு தேவையான வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அவசியமான அளவு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் நாட்களில் அதன் அவசியம் அதிகரித்தால் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.