மட்டக்களப்பு திருப்பழுகாமம் கண்ணன் சமுகநலன்புரி மன்றத்தினால் மரநடுகை நிகழ்வு


(வவுணதீவு நிருபர்)
மட்டக்களப்பு திருப்பழுகாமம் கண்ணன் சமுகநலன்புரி மன்றத்தினால் மரநடுகை நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பழுகாமம் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய வளாகத்தில் கண்ணன் சமுகநலன்புரி மன்றத்தின் தலைவர் ஜெகன் தலைைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சசி, கிராம உத்தியோகத்தர் க.மனேகரன், மகாவிஷ்ணு ஆலய அறங்காவலர்கள் , உழவர் கமநல அமைப்பின் தலைவர் ஆ.மகாலிங்கம் மற்றும் கண்ணன் சமுக நலன்புரி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்

இதன்போது இங்கு வருகை தந்த பிரமுகர்களாலும் சமூக ஆர்வலர்களாலும் மரக் கன்றுகள் நடப்பட்டது.