சுகாதார முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

(நூருல் ஹுதா உமர்)
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்பட இருப்பதனால் காரைதீவு பிரதேச பாடசாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் நேற்று(21) சனிக்கிழமை இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.ஜீவராணி மற்றும் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டார்கள்.