மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு மாளிகைக்காட்டிலிருந்து நிவாரணம் அனுப்பிவைப்பு

(நூருள் ஹுதா உமர்)
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் வீரியம் காரணமாக முற்றாக முடக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை மக்களுக்காக சாய்ந்தமருது மாளிகைக்காடு மீனவ சமூகத்தினால் வியாழக்கிழமை முழுவதும் மக்களிடம் சேகரிக்கப்பட்ட உலர் உணவு பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ளிக்கிழமை காலை மாளிகைக்காடு பிரதேசத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள், இயந்திரப்படகு உரிமையாளர்கள், சாய்ந்தமருது- மாளிகைக்காடு மக்களின் பங்களிப்புடன் தயார்படுத்தப்பட்ட 500 குடும்பங்களுக்கான சுமார் 2000 பெறுமதியான உலர் உணவுகள் வியாழன் இரவு முழுவதும் மீனவர்கள் பொதியிட்டு வெள்ளிக்கிழமை காலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தனர்.

எங்களின் தொழிலுக்கு எப்போதும் உருதுணையாக இருக்கும் வாழைச்சேனை மக்களை மனதில் கொண்டு முற்றாக முடக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பிரதேசத்தில் பொருட்களை வாங்கி கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டு பசியினால் துடித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு எங்களின் உதவி சிறிய ஆறுதலாக இருக்கும் என்பதனாலையே இந்த முயற்சியை மேற்கொண்டதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.