மட்டக்களப்பிலுள்ள நண்பர்களின் வீட்டுக்கு வந்து திரும்பிய சிங்கள நண்பன் விபத்தில் பலி


(ஷமி மண்டூர்)

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 35ம் கிராம வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

நேற்று முன்தினம் குறித்த வீதியில் இடம்பெற்ற விபத்தில் கடொல் மிஸ்திரிகே கமல் வர்ண தேஷப்பிரிய (வயது 35) என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்

சம்பவம் பற்றி தெரியவருவதாவது
 தனது இருப்பிடமான ரஜகரதென்ன பிரதேசத்திலிருந்து தனது நண்பர்களின் வீட்டுக்கு வந்து திரும்பிச்சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் வெட்ப்பட்டு கிடந்த மரத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாகவும் சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.