மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது


(ரீ.எல்.ஜவ்பர்கான்)
சட்டவிரோதமான முறையில் பாரிய அழிவினை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருட்களினை இன்று மாலை மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த நிலையில் கைப்பற்றபபட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார். 

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவிற்குக்கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மென்டிசின் வழிகாட்டலில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறின் ஆலோசனையின் பேரில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினாரால் இவ் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

762 ஜெலிக்னைட் குச்சிகள் 2622கிலோ அமோனியா 6000அடி சேவா நூல் 113 சைட்நைட் கூறுகள் உட்பட பெருமளவிலான வெடிபொருட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.