14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுக்கு இதுவரை கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது!- ஜெனரல் ஷவேந்திர சில்வா


14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுக்கு இதுவரை கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் – 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன் வரிசையிலிருந்து போராடும் இராணுவ வீரர்களுக்கு ஏற்றுவதற்காக 'அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பலாலி இராணுவ வைத்தியசாலை, அநுராதபுர இராணுவ வைத்தியசாலை, மன்னார் இராணுவ கள வைத்தியசாலை, வவுனியா இராணுவ கள வைத்தியசாலை, மின்னேரியா இராணுவ தள வைத்தியசாலை,அம்பாறையிலுள்ள இராணுவ கம்பெட் பயிற்விப்புக் கல்லூரி, கிளிநொச்சி இராணுவ தள வைத்தியசாலை, முல்லைத்தீவு இராணுவ தள வைத்தியசாலை,கொழும்பு இராணுவ வைத்தியசாலை, பனாகொடை 1 வது இலங்கை இராணுவ வைத்திய படையணி, தியத்தலாவை இராணுவ வைத்தியசாலை, 11 ஆவது படைப்பிரிவின் சிகிச்சை நிலையம், 22 வது படைப்பிரிவின் சிகிச்சை நிலையம், 61 வது படைப்பிரிவின் சிகிச்சை நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினருக்காக 31,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.