சமுர்த்தி அபிமானி சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தை -2021



(எம்.என்.எம்.அப்ராஸ்,எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமூர்த்தி பயனாளிகளை மேம்படுத்தும் முகமாக" சமுர்த்தி அபிமானி சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தை-2021" , காரைதீவு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் முன்னிலையில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ் .சதீஸ் தலைமையில் கண்ணகியம்மமன் ஆலய வளாகத்தில்
இன்று[07]ஆரம்பிக்கப்பட்டது.


காரைதீவு மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக சமுர்த்தி பயனாளிகளை ஒன்றிணைத்து விற்பனை நிலையங்கள் இங்கு அமைக்கப்பட்டதுடன் இன்று [07]தொடக்கம் நாளை வரை[ புதன் ,வியாழன் ]இரு தினங்கள் .விற்பனை சந்தை இடம்பெறவுள்ளது.இங்கு சமூர்த்தி பயனாளிகளுக்கு விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டு பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பாக ஆடைகள் ,மரக்கறி வகைகள், உணவு பண்டங்கள் ,பாதணிகள் ,பூச்செடிகள் என பல பொருட்கள் .விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .

இதன் மூலம் சமூர்த்தி பயனாளிகளின் வாழ்வாதம் மேம்படுத்தப்படகூடிய வாய்ப்புள்ளதுடன், இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ .ஜெகதீசன் ,நிந்தவூர் பிரதேச செயலாளர் எம் .அன்சார் ,காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்தீபன் ,மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தகர்கள் ,பொது மக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர் .