அம்பாறை உஹன பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு!



(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சூப்பர் வில்லேஜ்' திட்டத்தின் கீழ், அம்பாறை - உஹன பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ராஜகம கிராமத்தில், அதிமேதகு ஜனாதிபதி கெளரவ கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் 'செழிப்பு பார்வை' கருத்தின் படி 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடம் அண்மையில் பொதுமக்கள் பாவனைக்கென கையளிக்கப்பட்டது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டபிள்யு.டி.வீரசிங்க , டொக்டர்.திலக் ராஜபக்ஷ மற்றும் உஹன பிரதேச செயலாளர் அஜந்தா குமாரி ஆகியோரின் பிரசன்னத்துடன் , உஹன பிரதேச சபை உறுப்பினர் எச்.பி.ஜயதிலக அவர்களின் அழைப்பின் பேரில் வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அப்பகுதியின் பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திருமதி சந்திர தேவரப்பெருமா, பிரிவின் கிராம சேவை அதிகாரி, அப்பகுதியில் உள்ள அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.