மட்டக்களப்பு தொழிலதிபர்களின் மனிதாபிமானத்தின் வெளிப்பாட்டில் 2 மில்லின் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைப்பு!



(சிவம்)
மனிதாபிமானப் பணியை வெளிப்படுத்தும் நோக்கோடு கொவிட்-19 தாக்கத்தைக் கண்டறிவதற்கான மருத்துவ உபகரணங்கள் மட்டக்களப்பு தொழிலதிபர்களினால் போதனா வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம்  (21) மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

கொரோனா வைரசின் 3 ஆவது அலை வீரியம் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் மிகவும் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக தொற்றுக்குள்ளாவர்கள் மற்றும் மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் தாக்கத்திற்குள்ளானவர்களைக் கண்டறிந்து சிகிட்சையளிப்பதற்காக சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் அர்ப்பணிப்புமிக்க சேவைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட கொவிட்-19 கொரோனா தடுப்பு செயலணியின் வேண்டுகோளிற்கிணங்க ரூபாய் 2 மில்லின் பெறுமதியான Hydrogen Peroxide Vaporizer மற்றும் Nocolyse ஆகிய இரு மருத்தவ உபகரணங்களை தொழிலதிபர்களான எம். செல்வராஜா ( ஈஸ்ட் லகூண் ஹோட்டல்), வி. ரஞ்சிதமூர்த்தி (விஜய் கட்டிட ஒப்பந்தக்காரர்), ஜே.ஜெகதீசன் ( சகானா கலர் லேப்), எஸ் யோகேஸ்வரன் (சுபா கோல்ட் ஹவுஸ்), பி.சாந்தகுமார் (அஜந்தா ரேடர்ஸ்- செங்கலடி) மற்றும் கே.செல்வநாயகம் ஆகியோர் இணைந்து குறித்த உபகரணங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சணி கணேசலிங்கத்திடம் கையளித்தனர்.

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட கொரோணா ஒழிப்பு செயலணியின் பிரதானியும் 23 அவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த மட்டக்களப்பு மாவட்டபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், 231 ஆவது படைப்பிரிவின் விறிகேட் கொமாண்டர் வி.எம்.என். ஹெட்டியாராச்சி, நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் வி. தேவகாந்தன் மற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.