(ரூத் ருத்ரா)
மட்டக்களப்பு வாழைச்சேனை வாகநேரி பகுதியில் நீர் நிரம்பிய குழியில் 3 வயது சிறுமி தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விக்னேஸ்வரன் லக்ஷிக்கா வயது (3) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இன்று காலை சிறார்களுடன் விளையாடிய பிள்ளையை காணவில்லை என தேடிய போது நீர் நிரம்பிய குழியினுள் இருந்து பிள்ளையின் சடலத்தினை மீட்டுள்ளனர்.
கிணறு கட்டுவதற்கான வெட்டப்பட்ட குழியானது பாதுகாப்பான கட்டுக்கள் கட்டப்படாத நிலையில் பிள்ளை அதற்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.