மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவுஸ்ரேலியன் மருத்துவ உதவிச் சங்க உதவியில் 04 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் !

(க.சூரியகுமாரன்)
அவுஸ்ரேலியன் மருத்துவ உதவிச் சங்கமானது (Australian Medical Aid Foundation) வியாழன்  (03.06.2021) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 04 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களையும் பொருட்களையும் வழங்கியுள்ளனர். 

தற்போது COVID 19 மட்டக்களப்பு மாவட்டத்தில் வீரியமடைந்துள்ள இச்சூழ்நிலையில் இந்த உதவியானது மிகவும் பயனுள்ளதென மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் Dr கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களும் சத்திரசிகிச்சை நிபுணர் Dr. P. ஜீபரா அவர்களும் தெரிவித்துள்ளனர்.