கடந்த 3 மாதங்களின் பின்னர் சந்தேகநபர்கள் ஐவரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, ஐவருக்கும் எதிராக பயங்கரவாத சட்டத்தின் பிரிவின் கீழ் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதேநேரம், சந்தேக நபர்கள் ஐவரிடம் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எவையும் இல்லாததால் வழக்கை தொடர முடியவில்லை என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதனையடுத்து, குறித்த ஐவரையும் விடுதலை செய்வதாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்பையில் கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மறுவாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி, இளவாலை பொலிஸ் பிரிவில் இருவர், கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவர் என குறித்த ஐவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்
கடந்த ஏப்ரல் மாத முற்பகுதியில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




.jpg)



.jpg)
.jpeg)



