இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு !
(யூ.கே. காலித்தீன்)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று (30) புதன்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, 96 வாக்குகளைப் பெற்று ஜஸ்வர் உமர், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, குறித்த பதவிக்கு ஜஸ்வர் உமருடன் எதிர்த்து போட்டியிட்ட கலாநிதி மனில் பெர்ணான்டோ 90 வாக்குகளை மாத்திரமே பெற்றார்.
இதற்கு முன்னர் ஐந்து வருடங்களாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி, ஆகிய பதவிகளில் ஜஸ்வர் உமர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.