இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டின் சி.சி.ரி.வி கமரா பகுப்பாய்வு சோதனைக்கு !


மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் அவரது மெய்பாதுகாவலர் ஒருவரை சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக அமைச்சரின் வீட்டில் பொருத்தப்பட்ட சி.சி.ரி.வி கெமரா டிவிஆர் காட்டிஸ் (வன்தட்டு) மொரட்டுவ அரச இராசனவியல் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி அமைச்சரின் வீட்டிக்கு முன்னால் அமைச்சரின் மெய்பாதுகாவலர் ஒருவரால் ஒருவரை துப்பாக்கியல் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது இதில் மகாலிங்கம் பாலேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் முக்கிய தடைய பொருளாக அமைச்சரின் வீட்டில் பொருத்தப்பட்ட சி.சி.டீ.வி கெமரோவின் பாகமான டிவிஆர் காட்டிஸ் (வண்தட்டு) சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் ஒரு மாதகாலத்திற்கு மேலாக பழுதடைந்து கழற்றப்பட்டு திருத்த கொடுக்கப்பட்டதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து அந்தசி.சி.டீ.வி கெமரோவின் பாகமான டிவிஆர் காட்டிஸ் (வண்தட்டு) பொலிசாரிடம் ஒப்படைத்ததையடுத்து இதனை மொறட்டுவவில் உள்ள களணி மற்றும் இலத்திரணியல் தொடர்பான அரச இராசனவியல் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டு அதனை பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்.

இந்த சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றதாக அவர் தெரிவித்தார்.