வீதி விபத்துக்களால் நேற்று மாத்திரம் ஒன்பது பேர் பலி !


நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களினால் கடந்த 24 மணிநேரத்தில் ஒன்பது உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் வீதி விபத்துக்களினால் 10 பேர் உயிரிழந்துள்ளதுடனர்.

அதேநேரம் 2021 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து தற்போது வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் 1,270 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர், அத்துடன் 7,100 க்கும் அதிகளவானோர் காயமடைந்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் வீதிவிபத்துக்களும் அவற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவரும் வருகின்றது.

இவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சட்டங்களையும் தண்டனைகளையும் வலுப்படுத்தினாலும், வாகனசாரதிகள் உரியவாறு ஒழுக்கமாக செயற்படாதவிடத்து விபத்துக்களைக் குறைக்கமுடியாது என்று குற்றங்கள் மற்றும் வீதிப்போக்குவரத்துக்குப் தொடர்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.