மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுர சுற்று வளைவில் விபத்து ! ஒருவர் வைத்தியசாலையில்

 மட்டக்களப்பு நகரில் இன்று நண்பகல் இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகர் மணிக்கூண்டு கோபுர அருகாமையில் இன்று நண்பகல் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த வாகன விபத்தில் ஒருவர் பலத்தகாயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இடம்பெற்றுள்ள விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்