க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியீடு: அடுத்த வாரம் தீர்மானம்க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவது தொடர்பாக அடுத்த வாரம் இறுதியில் முடிவு எடுக்கப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அழகியல் பாடங்களின் நடைமுறைத் தேர்வுகள் இன்னும் நடத்தப்படாததால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.