கொரோனாவின் புதிய அலை உருவாகியுள்ளது!


உலகெங்கிலும் கொரோனாவின் புதிய அலை உருவாகி வருவதாக, ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

அந்த அலையால், நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அவர் மேலும் கூறினார்.

மேலும், நாட்டில் தடுப்பூசி திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தடுப்பூசி திட்டம் தொடர்பான தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பான அனைத்து விவரங்களும் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றார்.