இறுதி முடிவின்றி முடிந்தது சம்பளப் பேச்சு நாளையும் தொடரும்

பிரதமர், கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவுக்கு வந்துள்ளது.

குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான தங்களது நிலைப்பாட்டை நாளைய தினம் அறிவிப்பதாக அதிபர் ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசிரிய தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.