மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை



தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து இயற்கை அபாயங்கள் முன்னெச்சரிக்கை ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு – வடகிழக்கு நோக்கி நகரும் என்று கூறப்பட்டுள்ளது.

கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் அந்த மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக மீனவ மற்றும் கடற்படை சமூகத்தினர் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.