ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தனக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை கையளித்து விட்டு, முச்சக்கரவண்டியில் வீடு திரும்பினார்.
தனது அனைத்து சொத்துக்களையும், அமைச்சிடம் கையளித்துள்ளதாக அவர் கூறிய நிலையிலேயே, முச்சக்கரவண்டியில் சென்றார்.
”நான் வாகனங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டேன். பொருட்களையும் ஒப்படைத்து விட்டேன். நான் இப்போது முச்சக்கரவண்டியில் தான் செல்கின்றேன். நீதிமன்றத்திற்கு சென்று வாகனத்தை பெற்றுக்கொள்வேன். நீதிமன்றம் சென்று சிறிது காலத்திலேயே வாகனமொன்றை கொள்வனவு செய்ய முடியும். கொள்ளையடித்து எடுப்பது அல்ல. நான் நீதிமன்றத்திற்கு சென்று, தொழிலை செய்து, வாகனத்தை வாங்குவேன். சிறந்த எதிர்காலமாக அமையட்டும்” என அவர் கூறினார்.