ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றம்!ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு, எரிவாயுவிற்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு என்பவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோர் பலவந்தமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கு முயன்றுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.