திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் காவலர் ஒருவரை தாக்கியதாக ஒருவரை கைது செய்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சம்பவ தினமான இன்று நோயாளி ஒருவரை பார்வையிட வருகை தந்த வேலை குறித்த வைத்தியசாலை காவலர்களுடன் முரண்பாடு ஏற்பட்டதாகவும் பின்னர் நோயாளியைப் பார்வையிட வருகை தந்த குறித்த நபர் வைத்தியசாலை காவலரை தாக்கியதாகவும் நபருக்கு எதிராக துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை அடுத்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட சிலர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது மனைவியை பார்வையிடுவதற்காக குறித்த சந்தேக நபர் வருகை தந்ததாகவும் இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் குறித்த வைத்தியசாலை காவலர் இது நோயாளியை பார்வையிடுவதற்கான நேரமல்ல ஒரு நேரத்தில் ஒருவர் மாத்திரமே பார்வையிட முடியும் என தெரிவித்ததை அடுத்து குறித்த சந்தேக நபர் குறித்த வைத்தியசாலை காவலரினால் வெளியில் அழைத்துவரப்பட்டு வைத்தியசாலை பாதுகாவலரினாள் குறித்த சந்தேகநபர் தாக்கப்பட்டதாகவும் வைத்தியசாலை காவலர்கள் பின்னர் சந்தேகநபர் பாதுகாவலரை தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு பாதுகாவலரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு திட்டம் தீட்டியதாகவும் நேரில் கண்ட சிலர் விசனம் தெரிவித்தனர்.
இவ்வாறு இருக்கையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் முழு கட்டுப்பாட்டையும் தமக்குக் கீழ் வைத்திருக்கும் தனியார் நிறுவன காவலாளி பலர் அவ்விடத்தில் சேவையில் இருக்கும்போது தனிநபர் ஒருவரால் குறித்த காவலாளி தாக்கப்பட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வீணான பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபருக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் எனவும் நேரில் கண்டவர்கள் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.







.jpeg)


.jpeg)

