நாடாளுமன்ற உறுப்பினரானார் தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கையின் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணையின்றி உயர் நீதிமன்றத்தால் நேற்று நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு பதிலாகவே இவர், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.