மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒன்றரை மாதங்களுக்கு பின்னர் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு பொதுமக்கள் குழப்ப நிலையினை ஏற்படுத்தினர்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இலக்கம் அடிப்படையில் எரிபொருள் நிரப்பும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சில அரச உத்தியோகத்தர்களுக்கும் பெற்றோல் வழங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் நீண்ட நேரமாக பொதுமக்கள் வரிசைகிரமமாக நிற்கும்போது இடையில் அரச உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் நிரப்ப முற்பட்ட நிலையிலேயே அமைதியின்மையேற்பட்டது.
இதன்போது பொலிஸ் உயர் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் வருகைதந்து நிலைமையினைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
நீண்டகாலமாக எரிபொருள் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் அரச அலுவலகங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர்களுக்கான எரிபொருட்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் தொடர்ந்து சீரான முறையில் அங்கு எரிபொருட்கள் விநியோக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.