பாடசாலை பாடத்திட்டம் தொடர்பில் கல்வியமைச்சு ஆய்வை முன்னெடுக்கிறது !எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் மாணவர்கள் பாடசாலை பாடத்திட்டத்தின் சில பகுதிகளை தவறவிட்டனரா என்பதை அறிய கல்வி அமைச்சு ஆய்வு ஒன்றை ஆரம்பித்துள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் பாடசாலை பாடத்திட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான பிரிவுகளை பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.